ஆறாவது ஆண்டில் உங்கள் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன். பதிவுகளைப் பார்வையிட்ட புள்ளவிபரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டில் நிறத்தில் இடம்பெற்ற பதிவுகளில், உங்களைக் கவர்ந்த [...]

ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) நாம் வாழுகின்ற இந்தக் காலம் அதிகம் அழகுடையது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்புகள் விரிந்து கிடப்பது போல், இந்தக் காலத்திற்கும் அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை தொழில்நுட்பம் மட்டுந்தான் ஏற்படுத்தித் தந்துள்ளதென்றால், அது பிழையென்று சொல்வேன். மாற்றங்களை நேசிப்பதற்கும், அந்த மாற்றங்களின் பால் உண்டாகும் விடயங்களை தன் சார்பான நிலையில் வைத்து கணித்து வாழ்தலின் அழகை ரசிப்பதற்கும் பழகியுள்ள [...]

முத்தங்களும் மூன்று வருடங்களும்

வாழ்க்கையில் நாம் பல விடயங்களைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதும் அவற்றில் சிலவற்றை அதீத ஆர்வத்துடன் செய்வதும் அதனாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சக்கரம் போலவே சுழன்று கொண்டேயிருக்கிறது. ஆரம்பிப்பதுதான் கஷ்டமானது. ஆரம்பித்துவிட்டால் எல்லாமே சுபமாக அமையும். அல்லது சுபமாக அமைய வேண்டியதற்கான வழிகள் பிறக்குமென பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். போனஸாக பல நூல்களிலும் இந்த எண்ணத்தை வாசித்திருக்கிறேன். நிறம் என்ற எனது இந்த வலைப்பதிவை நான் தொடங்கி அதில் முதல் பதிவிட்ட நாளும் இன்று [...]

இரண்டு வருடங்களும் பத்து நாட்களும்

ஏதோ புதிர் கணக்கொன்றுக்கு விடை சொல்லுமாப் போல், நான் தலைப்பொன்றை எழுதியுள்ளேனே என்றல்லவா நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு புதிரும் இல்லைங்க.. கடந்த 18 ஆம் திகதி ஒரு பதிவை நான் நிறத்தில் இட்டிருக்க வேண்டும். சில பல வேலைப்பளுக்களால் அது முடியாமல் போனது. இன்றுதான் அதற்கு நேரமான அவகாசம் கிடைத்தது. அப்படி என்னதான் ஒரு திகதியில முக்கியமா பதிவு போட வேண்டிக்கிடக்கு என்று நீங்கள் கேட்டிறக்கூடாது என்று நினைப்பதால், என்ன விடயம் என்பதையும் சொல்லியே விடுகிறேன். நிறம் [...]

இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்

வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த வல்லோனைப் போற்றுகின்றேன். இது நான் பாடசாலை நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். இப்பதிவிற்கும் இவ்வசனமே முதல் வசனமான அமைதல் பொருத்தமானதாக இருக்கும் என நம்பினேன். அது இப்பதிவின் முதல் வசனமாயிற்று. கடந்த வாரம் பூராக நிறம் வலைப்பதிவில் “என்னவென்று சொல்வது?” என்ற தலைப்புடன் இத்தனை நாட்களில் சொல்கிறேன் என சிறிய அறிவிப்பொன்றை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அந்த அறிவிப்பில் மறைந்திருந்த விடயத்தை [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers