வளராத மூங்கிலும் நானும்

அதுவொரு வெள்ளிக்கிழமை ஆனந்தமான மாலை நேரம். பகல் சாப்பாட்டை அருந்திய பின்னர், குடும்பத்தினர் எல்லோரும் குதூகலித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு வயது எட்டு ஆகும். (ஆமா.. உதய தாரகை தொடங்கிட்டாரு பழைய புராணங்களைச் சொல்றதுக்கு..!!)அந்தத் தினத்தில் எனது உறவினர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். தனது பிள்ளை கதைக்கப்பழகிவிட்டால் அம்மழலை மொழியை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டி ஆனந்தம் அடையாத பெற்றோர்கள் இந்த அவனியிலேயே (அதுதான் பூமி என்பதற்கு ஒத்த கருத்துச் [...]

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்

நேற்று நான் வாசித்த Alex Tan எனும் அறிஞனின் கூற்று பற்றி நான் நிறத்தில் ஒரு பதிவைக் கட்டாயம் இட வேண்டுமென எண்ணினேன். வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் பற்றி நான் நிறத்தில் கதைத்திருக்கிறேன். அண்மையில் கூட “நான் அழுத அந்தத் தருணங்கள்” என்ற தலைப்பிலான பதிவின் மூலம் ஆண்கள் அழலாமா? என்பதை அலசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. (இவரு பெரிய இவரு.. அலசுராராம்.. சின்னப்புள்ளத்தனமா இல்ல…) அண்மையில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் [...]

தலைப்பில்லாமல் ஒரு பதிவு

நிறம் வலைப்பதிவின் “இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் நான்காவது பதிவுயிது. யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம் என்ற சொல்வாக்குடன் தொடங்கிய இப்பதிவுத் தொடர் எனது வாழ்க்கை அனுபவங்களையும் சம்பவங்களையும் அர்த்தத்துடன் சொல்லிக் கொண்டு வருகின்றதாய் அமைந்துள்ளதென நம்புகிறேன். எனது எண்ணங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொள்ள நிறையத் தகவல்கள் என்னிடம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை எல்லாவற்றையும் பதிவாக்கி நிறத்தில் பதிப்பிக்க (ஏன் உதய தாரகை இப்படியெல்லாம் பில்ட் அப் எப்போதுமே ஏற்படுத்திக் கொள்றீங்க..?..)

எனது முதலாவது காதலி

தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…) என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய [...]

பட்டம் பறக்கும் இரகசியம்

இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும், தொடரின் முதல் பதிவை இன்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நான் சந்தித்த அனுபவங்கள், சம்பவங்கள், பாத்திரங்கள் என விரிந்து செல்லும் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்துள்ளேன் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதோ விரிகிறது என் நினைவுகளில் இருந்தும் அகலாத சம்பவமொன்று.

நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தோன்றியது என்ன? நிறங்களின் மீடிறன்களின் எல்லையில்லாத் தன்மையை நான் சொல்லப் போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்? அல்லது இந்த வலைப்பதிவின் ஏதாவது சாதனையை நான் சொல்லப்போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்? நீங்கள் என்னதான் நினைத்தாலும் நான் சொல்லப் போகும் விடயமோ கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால், சுவையாக இருக்குமென நம்புகிறேன். அப்படியென்ன நான் சொல்லப்போகிறேன். (வியப்பு உஙகள் கண்களி்ல் தெரிகிறது!! )

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers